உலகிற் சிறந்தது தமிழ் மொழியின் என நாம் அனைவரும் அறிந்ததே, ஆனாலும் அவற்றின் சில கூறுகளை நாம் பயன்படுத்தாமலேயே வாழ்ந்து வருகிறோம்.
நாட்கட்டிகளிலும், கணித செயல்பாடுகளிலும் நாம் பயன்படுத்தி வரும் எண்கள் இந்திய அரேபிய எண்கள் ஆகும்.
தமிழ் தனக்கென எண் உருக்களை கொண்டுள்ளது அவ்வாறான எண்களை தமிழ் எண்கள் என்கிறோம்.
பல ஆண்டுகள் வாய்பட்டு தாள்களில் மட்டுமே பெயரளவில் இடம் பெற்றிருந்த இந்த தமிழ் எண்கள் இன்று குழந்தைகள் பாடப் புத்தகங்களில் அச்சாகி படித்து வருகின்றனர்.
தமிழறிஞர்கள் தவிர தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழர்களுக்கு தமிழ் எண்கள் தெரியாத நிலையே உள்ளது.
இந்த நிலையை மாற்றி அமைக்க எங்களது ஒரு சிறிய முயற்சி இந்த
" தமிழ் எண்களில் இனிக் கடிகாரம் ".
தமிழ்மொழியின் சிறப்பே, அது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியென ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளதே. அறிவியலின் தொடக்கம் தான் எண்ணியல்.
தமிழ் மொழியின் எண்ணியலின் சிறப்புக் கூறுகளை நாம் பயன்படுத்தாமலேயே வாழ்ந்து வருகிறோம். எண் என்ற சொல்லுக்கு, நீறுதல் என்ற பொருளும் உள்ளதால், ஒன்று தொடங்கி நீண்டு செல்லும் இலக்கங்களையும் எண் என்ற பெயரால் குறித்தனர். தமிழறிஞர்கள் தவிர தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழர்களுக்கு தமிழ் எண்கள் தெரியாத நிலையே உள்ளது. இந்த நிலையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறோம்.